சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததால் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று மேலும் அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் 166 புள்ளிகள் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் 97 புள்ளிகள் உயர்ந்து 15,829 புள்ளிகளுக்கு உயர்ந்தது.
இதேப்போல தேசப் பங்குச் சந்தை குறியீடும் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் 28.55 புள்ளிகள் உயர்ந்து 4,648 புள்ளிகளை எட்டியது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல்.என்.டி., பெல்., கிராசிம், எச்டிஎப்சி., இன்போசிஸ், ஸ்டேட்பாங்க் ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
(பி.டி.ஐ)