புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் காவிரி நதிப் படுகையில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஆய்வு நடத்தி வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது!
காவிரிப் படுகையில் டி-5 என்று கருதப்படும் 14,235 சதுர கி.மீ. பரப்பளவை குத்தகை எடுத்து ஆய்வு நடத்தி வந்த ரிலையன்ஸ் நிறுவனம் அங்கு இந்த எண்ணெய் வளத்தை கண்டுள்ளதாகவும், அது மிக ஆழமான இடத்தில் பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிலையன்ஸ் பெட்ரோலியம் பிரிவின் தலைவர் பி.எம்.எஸ். பிரசாத், அந்த இடத்தில் எந்த அளவிற்கு எண்ணெயும், எரிவாயுவும் உள்ளது என்று இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார். (யு.என்.ஐ.)