அந்நிய செலாவணியில் அயல்நாடு வாழ் இந்தியர்கள் துவக்கும் வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதத்தை ஐ.டி.பி.ஐ. உயர்த்தியுள்ளது!
இந்திய தொழிலக மேம்பாட்டு வங்கி என்றழைக்கப்படும் ஐ.டி.பி.ஐ., அயல்நாடு வாழ் அந்நிய நாணய கணக்கின் [டாலர் கணக்குகள் - FCNR (B)] மீதான வட்டி விகிதத்தை கீழ்க்கண்டவாறு உயர்த்தியுள்ளது.
1. ஓராண்டிற்கும் அதிகமாக - இரண்டு ஆண்டிற்குக் குறைவாக 4.68 விழுக்காடு
2. நான்கு ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி கணக்குகளுக்கு 4.71 விழுக்காடு
என்.ஆர்.இ. என்றழைக்கப்படும் அயல்நாடு வாழ் அந்நிய நாணய வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதம் 1. ஓராண்டிற்கு மேலாக - இரண்டாண்டிற்குள் 5.43 விழுக்காடு, 2. இரண்டாண்டுகளுக்கு மேல் - மூன்றாண்டுகளுக்குள்ளாக வட்டி விகிதம் 5.46 விழுக்காடு. (யு.என்.ஐ.)