உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும், வங்கிகள், தொலைத்தொடர்பு, உலோக நிறுவனங்களின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீடுகள் புதிய வரலாறு படைத்துள்ளன!
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்றைய வணிகத்தில் 142 புள்ளிகள் உயர்ந்து 14,805.60 புள்ளிகளை எட்டியுள்ளது. தேச பங்குச் சந்தைக் குறியீடு 33.80 புள்ளிகள் உயர்ந்து 4,357.55 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இன்று காலை 14,720 புள்ளிகளுடன் வணிகத்தை துவக்கிய மும்பை பங்குச் சந்தை இடையில் 14,828.39 புள்ளிகளைத் தொட்டது. அதன்பிறகு சற்று குறைந்து 14,805.6 புள்ளிகளில் முடிந்தது. இது ஒரு விழுக்காடு உயர்வாகும். (யு.என்.ஐ.)