இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தின் மதிப்பு 2010ஆம் ஆண்டிற்குள் ரூ.12,000 கோடி மதிப்பிற்கு உயரும் என்று எஃப்.ஐ.சி.சி.ஐ. மற்றும் யெஸ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நம் நாட்டிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தின் மதிப்பு 7,200 கோடி மதிப்பிற்கு உள்ளது.ஷ
இங்கிலாந்தை சேர்ந்த மருந்து நிறுவனங்களுக்கு இந்தியாவில் வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.