வருமானவரித்துறை பற்றிய தகவல்களை வெளிப்படையாக பொதுமக்களுக்குச் சொல்வதற்காக புதிய இணையதளத்தை வருமானவரித்துறை துவக்குகிறது.
டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வருமான வரித்துறையின் இணையதளமும் தொடங்கப்படுகிறது. அதன் விளக்க புத்தகமும் வெளியிடப்படுகிறது.
ஏற்கனவே வருமான வரித்துறை அளித்து வரும் சேவைகளை தெரிவிப்பதற்காக இணையதளத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதில், இந்தியா முழுவதிலும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்கள் பற்றிய தகவல்கள், அவற்றை, பொதுமக்கள் எவ்வாறு எளிதில் அணுகி தகவல்களை பெறுவது போன்ற பல்வேறு விவரங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வருமானவரித்துறை, புதிய முயற்சியாக மற்றொரு இணையதளத்தினை வியாழக்கிழமை தொடங்குகிறது.
தனது செயல்பாடுகளை வெளிப்படையாக பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த இணையதளத்தினை வருமானவரித்துறை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, பகிர்ந்து கொள்வோம் என்ற பொருளடக்கத்தில் ஒரு புத்தகத்தையும் வருமானவரித்துறை வெளியிடுகிறது. இந்த புத்தகத்தின் மூலம் வருமானவரித்துறை பற்றிய பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இணைய தளத்தின் முகவரி www.incometaxindiapr.gov.in.