மூன்றாம் தலைமுறை செல்பேசிகளான 3G i-phone களுக்குத் தேவையான 3G அலைவரிசை சேவைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா, அக்டோபர் மாத இறுதியில் 3G அலைவரிசை விற்பனைக்கு வரக்கூடும் என்றார்.
அண்மையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் 3G i-phone களை அறிமுகப்படுத்தின. ரூ. 31,000, ரூ.36,000 ஆகிய விலைகள் கொண்ட இந்தச் செல்பேசிகளுக்காக சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.