Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மினி கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு அரசு அனுமதி

Advertiesment
வணிகம்
, வியாழன், 25 ஜூலை 2013 (16:38 IST)
FILE
ஐந்து கிலோ எடையுள்ள மினி சமையல் கேஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்த மத்திய அரசு அனுமதியளித்து உள்ளது.

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் மானிய விலையில் ரூ.410 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மார்க்கெட் விலைக்கு ஏற்ப குறைந்த எடையில் மினி சிலிண்டர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று ஒப்புதல் தெரிவித்தார்.

பெரிய நகரங்களில் எவ்வித கஷ்டமும் இன்றி கேஸ் சிலிண்டர்கள் கிடைத்தால் விலையை பார்க்காமல் வாங்குவதற்கு பலரும் தயாராக இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மினி கேஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டம், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களிலும், பெங்களூரிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பெட்ரோல் 'பங்க்'களில் மட்டும், இந்த மினி கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும். மானிய கேஸ் சிலிண்டரோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.

சென்னையில் இந்த சிலிண்டரின் விலை 361 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிலிண்டரை வாங்கும்போது வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், பான் கார்டு ஆகியவற்றின் நகலை கொடுக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil