மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை
, வெள்ளி, 7 டிசம்பர் 2012 (17:52 IST)
மாலத்தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கொண்டுள்ள ஜிஎம்ஆர்-ன் கான்டிராக்ட்டை அந்த அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.மாலத்தீவுக்கு இந்தியா வழங்குவதாக இருந்த ரூ.250 கோடி நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இந்திய அரசு சார்பில் எந்த தகவலும் தங்களுக்கு தரப்படவில்லை என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது.நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் விதாமாக ஜிஎம்ஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முழு அதிகாரம் மாலத்தீவு அரசுக்கு உள்ளதாக சிங்கபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2010ம் ஆண்டு மாலத்தீவுகளின் தலைநகர் மாலேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக விடப்பட்ட 511 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., நிறுவனம் எடுத்திருந்தது. அப்போது மாலத்தீவுகள் அதிபராக நசீத் இருந்தார். அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முகமது வகீத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், முந்தைய நசீத் ஆட்சியில் வழங்கப்பட்ட கான்டிராக்ட்களை ரத்து செய்யும் பணியில் வகீத் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஜி.எம்.ஆர்., நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மாலே சர்வதேச விமான நிலைய மேம்பாட்டு கான்டிராக்ட்டை ரத்து செய்துள்ளது மாலத்தீவுகள்.மேலும் தற்போது விமான நிலையத்தின் கான்டிராக்ட், மால்தீவ்ஸ் ஏர்போர்ட் க்ம்பெனிக்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.