தங்கம் ஒரே நாளில் ரூ.248 அதிகரித்து பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது. சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது.
இடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 768 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.21 ஆயிரத்து 728 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 976 ஆக உள்ளது. அதாவது ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டு விட்டது. இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரத்து 770 ஆகவும், ஒரு கிராம் ரூ.59.65 ஆகவும் உள்ளது.