Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிசான் டீசல் மைக்ரா சென்னையில் அறிமுகம்

நிசான் டீசல் மைக்ரா சென்னையில் அறிமுகம்
, செவ்வாய், 14 டிசம்பர் 2010 (14:24 IST)
ஜப்பானின் புகழ் பெற்ற கார் தயாரிப்பாளரான நிசான் 6 மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்த பெட்ரோலில் ஓடும் சிறிய ரக மைக்ரான் மாடல் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அதே மாடலில் டீசலில் இயங்கும் நிசான் மைக்ரா எனும் மாடலை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
FILE

ஒரு லிட்டர் டீசலில் 23.08 கி.மீ. தூரம் ஓடும் நிசான் மைக்ராவை, நிசான் கார்களின் சென்னை விற்பனையாளரான ஷெரீ்ஃப் நிசான் பார்வையகத்தில் நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமிநோபு டோகுயாமா சென்னையில் நேற்று நடந்த விழாவில் அறிமுகம் செயதுள்ளார்.

“இது அன்றாடம் வாகனம் ஓட்டுவதை அனுபவிக்க விரும்பும் மக்களுக்காக நம்பத்தக்க, ஒயிலான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கார் ஆகும்” என்று நிசான் நிறுவனம் கூறியுள்ளது.

டீசலி்ல் இயங்கும் நிசான் மைக்ரா எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி - பிரீமியம் ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ரீஜ் உட்புறத்துடன் கூடிய இந்தக் கார்கள் சன்லைட் ஆரஞ்ச், பிரிக் செட், பசி்ஃபிக் புளூ, ஸ்டார்ம் ஒயிட், பிளேட் சில்வர், ஓனிக்ஸ் பிளாக் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கும். நிசான் மைக்ரா டீசலின் சென்னை பார்வயக விலை எக்ஸ்வி ரூ.5,58,500, எக்ஸ்வி - பிரீமியம் விலை ரூ.6,04,500 ஆகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil