உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.6% விழுக்காடாக குறைந்துள்ள நிலையில், மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ரூபாயின் பணவீக்கம் மேலும் குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் குறைந்து வருவது நல்லது... இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.