பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கச்சா பருத்தி, பருத்தி நூல் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறு தென் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோட்டில் செவ்வாய் கிழமை தெ.இ.ஜ.உ.ச. கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாகிகள், இந்தியாவில் 15 இலட்சத்திற்கும் அதிகமான விசைத் தறிகள் செயல்பட்டு வருவதாகவும், அவைகள் ஆண்டொன்றிற்கு 200 கி.கி. பருத்து நூலை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் ஏற்றுமதியின் காரணமாக கடந்த சில நாட்களாக பருத்தி நூலின் விலை உயர்ந்துவிட்டது என்றும், இதன் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது என்றும், ஆனால் அதிக விலைக்கு ஜவுளியை வாங்க வணிகர்கள் மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.