இரும்பு உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இரும்பு விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுள்ளதென டாட்டா நிறுவனம் கூறியுள்ளது.
ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம் முத்துராமன், “உலக அளவில் இரும்பு மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தினால் ஏற்படும் இழப்பை பயனாளர்கள் தலையில் ஏற்றவில்லையென்றால் நிறுவனங்களின் இலாபம் குறையும். எனவே, மூலப் பொருட்களின் விலையேற்ற அளவிற்கு இரும்பு விலைகளை ஏற்ற முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த விலையேற்றம் எந்த அளவிற்கு இருக்கும் என்று முத்துராமன் கூறவில்லை.