Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவுப்பொருள் விலை உயர்வு விகிதம் 16.12%-ஆகக் குறைவு

உணவுப்பொருள் விலை உயர்வு விகிதம் 16.12%-ஆகக் குறைவு
உணவுப்பணவீக்க ஆண்டு விகிதம் ஜூன் 5ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 16.12%ஆகக் குறைந்தது.

பழங்கள், காய்கள், மற்றும் தேயிலை விலை குறைவால் உணவுப்பணவீக்கமும் குறைந்தது.

கடந்த வாரத்தில் உணவுப்பொர்டுகளின் ஆண்டு விலை உயர்வு விகிதம் 16.74 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உணவுபொருள் விலை உயர்வு விகிதம் குறைந்த இந்த வாரத்தில் பழங்களின் விலை 6 விழுக்காடும், காய்களின் விலை 2 விழுக்காடும் மலிவாயின.

நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டி 10.16%-ஆக உயர்ந்ததில் உணவுப்பொருட்கள் விலை உயர்வு விகிதமும் பெரும்பங்கு வகித்து வருகிறது,

Share this Story:

Follow Webdunia tamil