Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே மாதத்தில் கார் விற்பனை அதிகரிப்பு

Advertiesment
மே மாதத்தில் கார் விற்பனை அதிகரிப்பு
புது டெல்லி: , புதன், 9 ஜூன் 2010 (13:59 IST)
கார் விற்பனை மே மாதத்தில் 30.46 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மே மாதத்தில் மொத்தம் 1,48,481 கார்கள் விற்பனையாகி உள்ளன. சென்ற வருடம் மே மாதத்தில் 1,13,810 கார்களே விற்பனையாயின.

இதனுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மே மாதத்தில் கார் விற்பனை 30.46 விழுக்காடு உயர்ந்துள்ளது.

சென்ற வருடம் மே மாத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மே மாதத்தில் மோட்டார் பைக் விற்பனை 25.80 விழுக்காடு உயர்ந்து, 7,25,311 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வருடம் மே மாதத்தில் 5,76,537 மோட்டார் பைக்குகள் விற்பனையாகி இருந்தது.

கனரக வாகனங்களான டிரக், லாரி, பஸ் ஆகியவற்றின் விற்பனையும் 57.71 விழுக்காடு அதிகரித்து 48,580 ஆக உயர்ந்துள்ளது. இவை சென்ற வருடம் மே மாதத்தில் 30,803 மட்டுமே விற்பனையானது.

மாருதி சுஜிகியின் கார்கள் விற்பனை 27.9 விழுக்காடு அதிகரித்து 1,02,175 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வருடம் மே மாதத்தில் 79,872 கார்கள் மட்டுமே விற்பனையானது.

ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 15.5 விழுக்காடு அதிகரித்து 27,151 ஆக உயர்ந்துள்ளது.

ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 61 விழுக்காடு அதிகரித்து 8,225 ஆக உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் கனரக வாகனங்கள் விற்பனை 41.26 விழுக்காடு அதிகரித்து, 56,779 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹூரோ ஹோன்டா விற்பனை 14 விழுக்காடு உயர்ந்து, 4,35,933 ஆக அதிகரித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 62 விழுக்காடு உயர்ந்து, 2,99,442 ஆக அதிகரித்துள்ளது.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை 27 விழுக்காடு உயர்ந்து, 1,37,000 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் வாகனங்களின் விற்பனை அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வளர்ச்சி அடைய துவங்கியுள்ளதுடன், சுலபமாக கடன் கிடைக்கவும் துவங்கியுள்ளது. அத்துடன் வட இந்தியாவில் கல்யாண போன்ற சுபநிகழ்ச்சிகளே என்று இத்துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil