Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி

20 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி
புது டெல்லி: , திங்கள், 10 மே 2010 (10:56 IST)
இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்ய, எம்.எம்.டி.சி என்று அழைக்கப்படும் கனிம மற்றும் உலோக வர்த்தக கழகமமுடிவு செய்துள்ளது.
இது குறித்து, அரசுத் துறை நிறுவனமான எம்.எம்.டி.சி மேலாண்மை இயக்குநர் சஞ்ஜீவ் பாத்ரா கூறும் போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தம் 73,900 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதிலஎம்எம்டிசி மட்டும் 19 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்தது.
இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் மே 16 ஆம் தேதி அட்சய திருதியை வருவதால் தங்கத்தின் விற்பனையும், விலையுமமேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் திருமண சீசன் என்பதாலதங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று சஞ்ஜீவ் பாத்ரா தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil