Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் ஊனமுற்றோருக்கான ஏ.டி.எம்

உடல் ஊனமுற்றோருக்கான ஏ.டி.எம்
புது டெல்லி: , வெள்ளி, 4 டிசம்பர் 2009 (15:57 IST)
உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் வகையிலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்) பஞ்சாப் நேஷனல் வங்கி அமைத்துள்ளது.

இந்த ஏ.டி.எம் புது டெல்லியில் சர்வதே உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஆக்சன் பார் எபிலிட்டி டெவலப்மென்ட் அண்ட் இன்குலூசன் அமைப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மனும்- மேலாண்மை இயக்குநருமான கே.ஆர்.காமத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காமத் பேசுகையில், நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்ச்சியின் ஒரு அங்கமாக, இந்த உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் ஏ.டி.எம் அமைத்துள்ளோம். இது மாதிரியான அதிக ஏ.டி.எம்களை இனி வருடம் வருடங்களில் நிறுவப்படும் என்று கூறினார். ஆனல் எத்தனை ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.

பயோமெட்ரிக் ஏ.டி.எம் என்று அழைக்கப்படும் இவற்றில் டெபிட் கார்களை பயன்படுத்தலாம். டெபிட் கார்டின் உரிமையாளர் சங்கேத எண்ணை அழுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக விரல் ரேகை, கண்ணின் கருவிழி, முகம் ஆகியவற்றை அடையாளமாக பயன்படுத்தாலாம். இதனால் கண்பார்வை இல்லாதவர்கள் உட்பட உடல் ஊனமுற்றோர் ஏ.டி.எம் இயந்திரத்தை யாருடைய உதவியும் இல்லாமல் பயன்படுத்தம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil