நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஜூன் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மைனஸ் 1.14 (- 1.14) ஆக இருந்தது.
இதற்கு முந்தைய வாரத்திலும் இந்த விகிதம் - 1.61 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்க விகித காலத்தில் உற்பத்திப் பொருட்களின் குறியீடு ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது. என்றாலும் முதன்மைப் பொருட்களின் விலைக் குறியீடு 0.1 விழுக்காடும், எரிபொருள், மின்சாரம், உராய்வு எண்ணெய் உள்ளிட்டவற்றின் குறியீடு 0.4 விழுக்காடும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 11.8 விழுக்காடாக இருந்தது என்று மத்திய அரசின் தகவல் தெரிவிக்கிறது.