ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்துள்ள அந்நிச் செலவாணி மதிப்பில், நேற்றுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு 10 பைசா, பவுன்ட் ஸ்டெர்லிங் மதிப்பு ரூ.0.86 பைசா அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் யென் மதிப்பு ரூ.0.06 யூரோவின் மதிப்பு ரூ.0.10 பைசா, குறைந்துள்ளது.
இன்று காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.68 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 11 பைசா அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.57.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.62 முதல் ரூ.48.72 என்ற அளவில் இருந்தது.
இந்திய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்துள்ளன. அத்துடன் மற்ற அந்நியச் செலவானிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்தது. இவற்றால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பும் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
டாலர், ஜப்பானிய யென் ஆகிய செலவானிகளுக்கு நிகரான யூரோ மதிப்பு 1 விழுக்காடு வரை குறைந்தது.
நேற்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.70 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.62.54
100 யென் மதிப்பு ரூ.53.30
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.72.19 .