சுஜுகி மோட்டார் பைக் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்காக, கார்ப்பரேஷன் வங்கியுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக சுஜுகி மோட்டார் அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சுஜுகி நிறுவனத்தின் துணை நிறுவனம் சுஜிகி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
இது ஜுயுஸ், ஹூட், அசஸ் 125, ஜி.எஸ் 150 ஆர், ஹயாபுசா, இன்ட்ருடர் எம்1800 ஆர் ஆகிய பெயர்களில் மோட்டார் பைக் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த மோட்டார் பைக்குகளை வாங்குபவர்களுக்கு, கடன் வழங்குவதற்காக, கார்ப்பரேஷன் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் படி சுஜுகியின் 200 முகவர்களிடமும், கார்ப்பரேஷன் வங்கி கிளை மூலமாகவும் கடன் பெற்று, இதன் பைக்குகளை வாங்கலாம் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.