பாங்க் ஆப் இந்தியாவின் நிகர இலாபம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ரூ872.17 கோடியாக அதிகரித்துள்ளது.
(சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.511.89 கோடி).
இதன் மொத்த வருவாய் ரூ.5393.74 கோடியாக அதிகரித்துள்ளது. (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் மொத்த வருவாய் ரூ.3705.21 கோடி).
இந்த வங்கி தற்போது பிரச்சனையில் சிக்கி இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜுவின் மகனுக்கு சொந்தமான மாய்டாஸ் இன்ப்ரா நிறுவனத்திற்காக ரூ.215 கோடி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதை நஷட் கணக்கில் சேர்க்கவில்லை. இது குறித்து வங்கியின் சேர்மன், மேலாண்மை இயக்குநர் டி.எஸ். நாராயணசாமி கூறுகையில், வங்கி ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்றும் படி இதுவரை யாரும் கேட்கவில்லை. அப்படி கேட்கும் பட்சத்தில் தான் பிரச்சனை உருவாகும் என்று தெரிவித்தார்.