Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்க் உணவு வங்கிக்கு உணவு தானியம்

சார்க் உணவு வங்கிக்கு உணவு தானியம்
, செவ்வாய், 23 டிசம்பர் 2008 (14:15 IST)
புது டெல்லி: இந்தியா சார்க் உணவு வங்கிக்கு 1,53,200 டன் உணவு தானியங்களை வழங்க உள்ளது என்று வேளாண் துறை இணை அமைச்சர் டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தார்.

இந்த உணவு வங்கி, சார்க் அமப்பின் உறுப்பு நாடுகளின் உணவுப் பாகாப்புக்காக 2,43,300 டன் உணவு தானியங்கள் கையிருப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

சார்க் உணவு வங்கி, இந்த ஆண்டு அக்டோபர் 15,16 ஆம் தேதிகளில் நடைபெற்ற உணவு வங்கி தொடர்பான முதல் கூட்டத்தில் செயல்பட துவங்கியது. இந்த உணவு வங்கிக்கு ஆப்கானிஸ்தான்-1,420 டன், பங்களாதேஷ் 40 ஆயிரம் டன், பூட்டான் 150 டன், மாலத்தீவுகள் 200 டன், நேபாளம் 4,000 டன், பாகிஸ்தான் 40 ஆயிரம் டன், இலங்கை 4,000 டன் உணவு தானியங்கள வழங்க உள்ளன என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் வேளாண்ம, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil