புது டெல்லி: இந்தியாவின் உருக்கு உற்பத்தி இருமடங்காக ஆக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
மாநிளங்களவையில் நேற்று துணை கேள்வி ஒன்றிக்கு பதிலளிக்கையில், இந்தாயிவின் உருக்கு உற்பத்தி 2011-12 ஆம் ஆண்டில் 124 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் 2020 ஆம் ஆண்டில் 280 மில்லியன் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளாகவும் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற 2004 ஆம் ஆண்டில், உலக அளவு உருக்கு உற்பத்தியில், இந்தியா எட்டாவது இடத்தில் இருந்தது. தற்போது வருடத்திற்கு 54 மில்லியன் டன் உற்பத்தி செய்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நமது உருக்கு உற்பத்தி இலக்கு 2020 ஆம் ஆண்டில் 124 மில்லியன் டன்னாக இருந்தது. தற்போது இந்த இலக்கை 2011-12 ஆம் ஆண்டிற்குள் எட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் உருக்கு உற்பத்தியை 280 மில்லியன் டன்னாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நமது நாட்டில் குறிப்பிட்ட அளவு மட்டுமே உயர்ரக இரும்பு தாது உள்ளது. இதை அதிக அளவு ஏற்றுமதி செய்ய கூடாது. இதன் ஏற்றுமதியை குறைப்பதற்காக அதிக ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும்.
அதே நேரத்தில் இதன் ஏற்றுமதியை முழுவதும் தடை செய்ய முடியாது. ஏனெனில் இரும்பு சுரங்கங்களில் 5 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்க கூடாது. ஏற்கனவே உயர்ரக இரும்பு தாது மீது, ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், உள்நாட்டிலும் உருக்கு, இரும்பு பொருட்களை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதன் பயன்பாடு 13 விழுக்காட்டில் இருந்து 1.75 விழுக்காடாக குறைந்துள்ளது. அதே போல் ஜீன் மாதத்தில் இருந்து விலையும் குறைந்துள்ளது.
உருக்கு துறை அமைச்சகம், இந்த துறையில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் உருக்கு பொருட்களின் மீதான ஏற்றுமதி வரியை நீக்கியுள்ளது. உள்நாட்டு பயன்பாடுகள் குறைந்ததால், உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் நெருக்கடியை தீர்ப்பதற்காக ஏற்றுமதி வரி நீக்கப்பட்டன என்று ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.