புது டெல்லி: இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, கடனுக்கான வட்டியை 1 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இதனால் வாகனம், வீட்டு கடன் உட்பட மற்ற கடன்களுக்கான வட்டி குறையும்.
இனி கடனுக்கு 12.5% வட்டி வசூலிக்கப்படும்.
இதனால் பொதுத்துறை வங்கிகளிலேயே, பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்த அளவு வட்டியை வசூலிக்கும் வங்கியாக மாறியுள்ளது.
இதை தொடர்ந்து மற்ற பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று தெரிகிறது.
இதே போல் 1 முதல் 3 வருடங்களுக்கான வைப்பு நிதி வட்டியையும் 1 விழுக்காடு குறைத்துள்ளது.
முன்பு வைப்பு நிதிக்கு 10.5 விழுக்காடு வட்டி கொடுக்கப்பட்டது. இனி இது 9.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.