Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா பாதிக்கப்படும்- சுவராஜ் பால்.

Advertiesment
இந்தியா பாதிக்கப்படும்- சுவராஜ் பால்.
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:54 IST)
லண்டன்: தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இந்தியா அதிக அளவு பாதிக்கப்படும் என்று பிரபல தொழிலதிபர் லார்ட் சுவராஜ் பால் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பொருளாதார, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு இந்தியாவில் இருக்காது. ஏனெனில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரம் பலமாக இருக்கிறது.

எனவே மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை இந்தியாவிற்கு எதிர் கொள்ளும் சக்தி உள்ளது என்று பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு மாறாக பிரபல தொழிலதிபர் லார்ட் சுவராஜ் பால் கருத்து தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வாழும் அயல் நாட்டு இந்தியர் சுவராஜ் பால். இவர் காப்ரோ தொழில் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

காப்ரோ குழுமம் இந்தியாவில் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 22 தொழிற்சாலைகளை துவங்கி உள்ளது.

இவர் லண்டனில் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனை விட, இந்தியா அதிக அளவு பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நெருக்கடியின் தாக்கத்தை, இந்தியா காலம் கடந்தே உணர்ந்துள்ளது.

காப்ரா குழுமம் தொழிலாளர்களை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கும். இந்த வருடம் லாபம் 80 முதல் 90 மில்லியன் பவுண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலாபம் குறையும்.

இதற்கு முன்பு மூன்று முறை, இதே போல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை பற்றி குறிப்பிட்ட சுவராஜ் பால், தற்போதைய நெருக்கடியை, உலகத்தில் மற்ற நாடுகளை விட பிரிட்டன் சிறப்பாக கையாளும். பிரிட்டனுக்கு சிறப்பான பிரதமராக கார்டன் ப்ரவுன் இருக்கின்றார். இவரை போல் பிரச்சனையை நேரடியாக சந்திக்கும் தலைவர்கள், மற்ற நாடுகளில் இல்லை என்று கூறினார்.

கார்டன் ப்ரவுன் தனது நண்பர் என்பதை ஏற்றுக் கொண்ட் சுவராஜ் பால், நமக்கு சிக்கல்களையும், மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் பிரதமர் கிடைத்துள்ளார் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil