திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கயிறு உற்பத்தியை நவீனப்படுத்தி, தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்த மானியத்துடன் கூடிய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கயிறு வாரியம் மானியத்துடன் அளித்துள்ள ரிமோட் திட்டத்தில், 2008-09 ஆம் ஆண்டுக்கு கயிறு திரிக்கும் பணிகளுக்காக ரூ. 2 லட்சமும், மானியமாக ரூ. 80 ஆயிரம்,
குறு மற்றும் வீடுகளில் கயிறு உற்பத்தி செய்வபர்களுக்கு ரூ. 5 லட்சமும், மானியமாக ரூ. 2 லட்சமும் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் மூலம் தனி நபரோ, சுய உதவிக் குழுக்களோ, கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது கூட்டு நபர்களோ அல்லது ஏற்கெனவே தொழில் நடத்துபவர்களாகவோ பயன் பெறலாம்.
இவர்கள் கயிறு திரிக்கும் தொழிற்சாலை.யில், மதிப்புக் கூட்டும் கயிறு சாதனங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். இதற்கான நிருபணத்தை கயிறு வாரியத்தின் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த கடனுதவி முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.