பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தை (ரீப்போ ரேட்) ஒரு விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த ரீப்போ விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கு முன்னர் கடந்த 2004ஆம் ஆண்டில் ரீப்போ விகிதம் குறைக்கப்பட்டது.
இதுபற்றி நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், ரீப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பது, பணவீக்கம் மிதமான அளவை எட்டுவதற்கும், வளர்ச்சி விகிதத்தை பராமரிப்பதற்கும் உதவும் என்று தெரிவித்தார்.
வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்திற்கான (சிஆர்ஆர்) வட்டியை 0.25 விழுக்காடு ஆர்பிஐ குறைத்ததைத் தொடர்ந்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை சந்தையில் விடுவிக்க ஏதுவாக ரீப்போ விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.