Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புள்ளியியல் கிளை மாற்ற எதிர்ப்பு!

புள்ளியியல் கிளை மாற்ற எதிர்ப்பு!
கோவை : கோவையில் செயல்படும் இந்திய புள்ளியியல் கழகத்தின் கிளையை, சென்னைக்கு மாற்ற தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை சென்னைக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி, அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு, சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், இந்திய புள்ளியியல் துறையின் கோவை கிளை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பொருட்களின் தரம், பணிபுரிவோர் திறன் பற்றிய விவரம், உற்பத்தி செலவை குறைத்தல், சந்தை நிலவரம், வியாபார தோல்விக்கான காரணங்கள் போன்ற விவரங்களை இந்திய புள்ளியியல் கழகத்தின் கோவை கிளை மூலம் சீமாவின் உறுப்பினர்கள் பெறுகின்றனர்.

இதை சென்னை அலுவலகத்துடன் இணைப்பதால், கோவை கிளையின் மூலம் பொறியியல் நிறுவனங்கள் பெற்று வந்த ஆதரவை இழக்க நேரிடும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோவை கிளையை மாற்றுவதற்கு சீமா கடும் எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறது.

இது தொடர்ந்து கோவையிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil