அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உண்டாகியுள்ள பொருளாதார நெருக்கடி, மற்ற நாடுகளுக்கும் பரவும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியள்ளார்.
பிரான்சுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், லீ பிகாரோ (Le Figaro) என்ற பிரஞ்சு நாளிதழுக்கு பேட்டியளித்தார்.
அதில் உலகின் பொருளாதார பலம் உள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். தற்போது நெருக்கடி வளர்ந்த நாடுகளில் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கும் பரவும்.
உலக பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த இரு நாடுகளால் மட்டுமே தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியாது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கே உண்டு. அதே நேரத்தில் இதில் இந்தியாவும், சீனாவும் உதவி செய்யலாம் என்று மன்மோகன் சிங் கூறினார்.