ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துடன், எய்ஷர் மோட்டார்ஸ் கனரக வாகனங்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் கனரக வாகனங்கள், அடுத்த இரண்டு ஆண்டு முதல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
இதன் படி டிப்பர் லாரிகள், டிராக்டர் டிரெய்லர்கள் உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் தயாரிக்கபட உள்ளன.
எய்ஷர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ளது. இங்கு தினசரி 180 வாகனங்கள் தயாராகின்றன.
வால்வோ உடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்படும் கனரக வாகனங்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் லால் தெரிவித்தார்.