Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயோட்டாவின் “கொரலா ஆல்டிஸ்” அறிமுகம்!

டயோட்டாவின் “கொரலா ஆல்டிஸ்” அறிமுகம்!
, சனி, 6 செப்டம்பர் 2008 (13:38 IST)
டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் “கொரலா ஆல்டிஸ” ரக காரை அறிமுகப்படுத்தியது.

புது டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நேற்று புதிய கொரலா ஆல்டிஸ் (Corolla Altis) கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டயோட்டா கிர்லோஸ்கர் (Toyota Kirloskar) மோட்டார் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் சந்தீர் சிங் பேசுகையில், கொரலா ஆல்டிஸ் ரக கார்களில் மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் திறன் 130 ஹார்ஸ் பவர். முந்தைய கார்களை விட 7 ஹார்ஸ் பவர் அதிகம்.

இதில் எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங் உட்பட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதனை விற்பனை செய்ய பெரிய அளவில் திட்டமிட்டுள்ளோம். ஒரே நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள், விமான நிலையங்கள், நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் நடக்கும் அறிமுக விழாவில் விற்பனை செய்ய உள்ளோம். இந்த வருடத்தில் வரும் மாதங்களில் மாதத்திற்கு 2,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறனார்.

இந்த நிகழ்ச்சியில் டயோட்டா நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரி யசுஹிகோ யோகோய், (Yasuhiko Yokoi ) கொரலா ஆல்டிஸ் தலைமை பொறியாளர் சோசிரோ ஒக்குடைரா (Soichiro Okudaira), டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், மேலாண்மை இயக்குநர் ஹிரோஷி நககாவா (Hiroshi Nakagawa ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil