சிங்கூரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக இன்று காலையில் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர, அம்மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி முயற்சி எடுத்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு நடக்கும் பேச்சுவார்த்தையில், மாநில அரசு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஆளுநருக்கு உதவி செய்வதற்காக மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சித்ததோஸ் முகர்ஜியும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்க அரசு கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதால், பேச்சுவார்த்தை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.