Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரிக்கும் அஞ்சல் நிலைய சேமிப்பு!

அதிகரிக்கும் அஞ்சல் நிலைய சேமிப்பு!
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (10:23 IST)
பங்குச் சந்தைகளில் தொடர்ந்து விலை சரிவதால், அஞ்சல் நிலைய சிறுசேமிப்பு, அஞ்சலக வைப்பு நிதி, பொது ஓய்வுதிய திட்டம் போன்றவைகளில் சேமிப்பது அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கம் முதல் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்தவர்கள், குறிப்பாக சிறு முதலீட்டாளர்களின் கவனம் மற்ற சேமிப்பு திட்டங்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இவர்கள் அஞ்சல சேமிப்பு பத்திரம், பி.பி.எப் எனப்படும் பொது ஓய்வூதியம், குறிப்பிட்ட கால முதிர்வு அடிப்படையிலான வைப்பு நிதிகளில் சேமிக்க துவங்கியுள்ளனர்.

இந்த வகை திட்டங்களில் சென்ற ஆண்டு சேமிப்பு குறைந்தது. இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டு ஏப்ரல் முதல் ூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் பொது ஓய்வூதிய நிதியில் ரூ.4,974 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பிற்கு மத்திய அரசு 8 விழுக்காடு வட்டி தருகிறது.

இதன் வட்டி, வங்கிகள் வழங்கும் வட்டியுடன் ஒப்பிட்டால் குறைவு.

அதே நேரத்தில் அஞ்சலக சேமிப்பு போன்றவைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை கணக்கிட்டால் இதன் வருவாய் 11 விழுக்காடாக இருக்கும்.

பொது ஓய்வூதிய நிதி திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்தின் மீதான வருவாய், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை போன்றவைகளுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த சேமிப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்குகின்றது. எனவே எவ்வித ஆபத்தும் இல்லை. இது போன்ற காரணங்களினால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது உயர்ந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil