Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசைத்தறி: தொடரும் வேலை நிறுத்தம்!

விசைத்தறி: தொடரும் வேலை நிறுத்தம்!
, திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (15:21 IST)
கோவை மாவடடத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களுக்காக விசைத்தறிகள் துணி நெய்து கொடுக்கின்றன. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகி‌ன்றன. இதே அளவு தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.

விசைதறி தொழிலாளர்கள் 50 விழுக்காடு கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியாளர் வி.பழனிகுமார் ஆகியோர் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இன்றும் பேச்சுவார்த்தை தொட‌ர்‌ந்து நடைபெறுகிறது. இதில் முடிவு எட்டப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil