Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக வர்த்தக பேச்சுவார்த்தை இழுப‌‌றி!

உலக வர்த்தக பேச்சுவார்த்தை இழுப‌‌றி!
, புதன், 30 ஜூலை 2008 (11:57 IST)
உலக வர்த்தஉடன்பாடு எட்ட ஜெனிவாவில் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தை, உடன்பாடு ஏற்படாமல் முறியும் நிலையில் உள்ளது.

விவசாய துறை மானியத்தை குறைக்க அமெரிக்கா உட்பட வளரும் நாடுகள் மறுத்து வருகின்றன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் உட்பட வளரும் நாடுகள், தங்கள் நாட்டு விவசாயிகளை காப்பாற்ற வளர்ச்சியுற்ற நாடுகள் மானியத்தை குறைக்க வேண்டும்.

விவசாய விளை பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவது, இறக்குமதி தீர்வை விதிப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இத்துடன் தொழில் துறை உற்பத்தி பொருட்களின் இறக்குமதி- ஏற்றுமதி, சேவை துறை தொழில்களுக்கு வாய்ப்பு ஆகிய விஷயங்களிலும் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஜெனிவாவில் கடந்த ஒன்பது நாட்களாக உலக வர்த்தக அமைப்பில் உள்ள 30 முக்கிய நாடுகளின் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் இந்த பேச்சு வார்த்தை முறியும் நிலையை அடைந்து விட்டது என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி பிரச்சனையில் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கும், அமெரிக்கா போன்ற உணவு பொருட்கள் ஏற்றுமதி நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையில் எவ்வித முடிவும் எட்ட முடியவில்லை.

இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ள பிரேசில் அயலுறவு அமைச்சர் சில்சோ அமோரிம் கூறுகையில், எல்லா தரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலான எவ்வித வழிமுறையும் இல்லை. இப்போது செய்ய வேண்டியது, இதனால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் பீட்டர் மான்டேல்சன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட முடியுமா என்று தெரியவில்லை.

இன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்படும் விஷயங்களை பொறுத்தே உடன்பாடு எட்ட முடியுமா என்று தெரியவரும். இதில் கலந்து கொண்டுள்ள நாடுகள், இன்று முன்வைக்கப்படும் வரைவு நகல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இதை விட சிறந்த உடன்பாட்டை எட்ட முடியாது.

அந்த மாதிரியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை முறிவு என்று தான் கூற வேண்டும். இதனால் வளரும் நாடுகளில் விவசாய துறையில் சீர்திருத்தம் செய்ய முடியாது. அவர்கள் பல வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்ட முடியாமல் போய்விட கூடாது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil