Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீப்பெட்டி விலை ரூ.1 ஆக அதிகரிப்பு!

தீப்பெட்டி விலை ரூ.1 ஆக அதிகரிப்பு!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (10:38 IST)
தீப்பெட்டி விலை செப்டம்பர் 1‌ஆ‌ம் தேதியில் இருந்து இருமடங்காக உயர்த்தப்படுகிறது.

தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வர்த்தக சங்கம், தென்இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்கம், தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம், குடியாத்த‌த்தைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர் வர்த்தக சங்கம் ஆகியவை கூட்டாக விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் டூப்ளெக்ஸ் அட்டையின் விலை கடந்த ஆறு மாதங்களில் 1 டன் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.22,000 ஆக அதிகரித்து விட்டது.

இதே போல் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மெழுகு விலை ரூ.32,000 இல் இருந்து ரூ.66 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ரெட் பாஸ்பரசின் விலை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. சல்பரின் விலை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இதே போல் ஸ்பிலின்ட்ஸ், பாஸ்பரசின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தீப்பெட்டி விலை உயர்வை தடுக்க, இதன் மீது விதிக்கப்படும் மத்திய விற்பனை வரியை நீக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தோம்.

இந்த கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்து விட்டது. இதனால் தீப்பெட்டியின் விலையை ஒரு ரூபாயாக உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

மத்திய அரசு தடையில்லாமல் மெழுகு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil