மத்திய வரி வாரியத் தலைவராக என்.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் வரி வாரியத் தலைவராக இருந்த ரபீந்தர் சிங் மன்கோல்த்ராவிடம் இருந்து நேற்று பொறுப்புகளை என்.பி.சிங் ஏற்றுக் கொண்டார்.
இந்திய வருவாய் பணிகளின் 1971 ம் வருட குழுவைச் சேர்ந்த சிங், இதற்கு முன்பு மத்திய நேரடி வரி வருவாய் வாரியத்தின் பணியாளர் மற்றும் கண்காணிப்பு பிரிவு உறுப்பினராக இருந்துள்ளார்.
இவர் வருமான வரித்துறையில் மும்பை, பரோடாவில் ஆணையாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான சிங் சமஸ்கிருதத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.