Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரக மின்கட்டுமான கழகம் பங்கு வெளியீடு!

ஊரக மின்கட்டுமான கழகம் பங்கு வெளியீடு!
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (18:37 IST)
பங்குச் சந்தையில் மந்த நிலை நிலவிய போதும், மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம் (Rural Electrification Corporation) திட்டமிட்டபடி பொதுப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ரூ.90 முதல் ரூ.105 என்ற விலையில் வெளியிடுகிறது. மொத்தம் 15 கோடியே 61 ஆயிரத்து 20 ஆயிரம் பங்குகளை வெளியிடுகிறது. இதன் மூலம் இதன் மொத்த முதலீட்டில் 18.81 விழுக்காடு மதிப்பிற்கான பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு நாளை முதல் பிப்ரவரி 22 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மினி ரத்னா அந்தஸ்து பெற்றுள்ள பொதுத் துறை நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம், பல் வேறு மாநிலங்களில் ஊரக பகுதிகளில் மின் வசதி ஏற்படுத்துவதற்கு நிதி உதவி அளித்து வருகிறது.

பங்குச் சந்தையில் சமீப காலமாக பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மூன்று வாரங்களில் குறியீட்டு எண்கள் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் சரிந்தன.
அத்துடன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை, பட்டியப்பட்ட முதல் நாளே, ஒதுக்கீட்டு விலைக்கும் குறைந்தது.

இந்த சூழ்நிலையால் ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார் எம்.ி.எப்., மருத்துவமனை நிறுவனமான வொக்ஹார்ட் ஆகிய இரணடும் பொதுப் பங்குகளை திரும்ப பெற்றன.

அத்துடன் ஹைதரபாத்தைச் சேர்ந்த எஸ்.ி.இ.சி. கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் நிறுவனமும் பொது பங்கு வெளியீட்டை ஒத்திவைத்தது.

இந்த நிலைக்கு காரணம், பங்குளை வெளியிடும் நிறுவனங்கள், அவற்றின் உண்மையான மதிப்பை விட, பங்குகளுக்கு அதிக விலை நிர்ணயிப்பதே. இதை பங்குகளை வெளியிடும் நிறுவனங்களும், மெர்ச்சன்ட் பேங்கர்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு, சரியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஊரக மின்கட்டுமான கழகம் பொதுப் பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு எல்லா தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய மின்துறை செயலாளர் அனில் ராஜ்தான் கூறுகையில், பங்குச் சந்தையில் பஙகுகளின் விலை குறைவது, ஊரக மின்கட்டுமான கழகத்தின் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், கடந்த காலங்களில் சிறப்பாக செய்ல்பட்டுள்ள, இந்த மாதிரியான நிறுவனங்களையே எதிர்பார்க்கின்றனர்.
இதன் பங்குகள் மார்ச் மூன்றாவது வாரத்தில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கருத்தையே பங்குச் சந்தை ஆய்வாளர்களும் எதிரெலிக்கின்றனர். அவர்கள் இந்த பங்கின் விலை அதிக அளவு இல்லை. இதனிடம் போதிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சிறந்த முறையில் வரவேற்பு இருக்கும் என்று கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil