பன்னாட்டு பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாட்டின் பொருளாதார கொள்கைகளை அரசு அவ்வப்போது சீரமைக்கும் என்று டெல்லியில் 2006 -07 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டு பேசும் போது நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2007 - 08 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தொடும் என் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இதே நிலையில் தொடர வேண்டும் என்று தாம் விரும்பவுதாகவும், அதே நேரத்தில் பன்னாட்டு பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய தேவையான சீரமைப்புகளை அரசு அவ்வப்போது எடுக்கும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கலை எதிர்க்கொள்ள தற்போதைய சுழலில் புதிதாக கொள்கைகள் எதுவும் நாங்கள் வகுக்கவில்லை என்றும், எங்கு நிச்சயமற்ற நிலை ஏற்படுகிறதோ அதனை விரைந்து சமன் செய்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். வளர்ச்சிக்கும், பண வீக்கத்துக்கும் உள்ள இடைவெளியை அரசு சரியான அளவில் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவு பணவீக்கம் வளர்ச்சிக்கு உதவவுதாகவும், பணவீக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் இடையிலான நிலை சுமுக நிலையில் உள்ளதாக பொருளாதார வல்லூநர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். நாட்டின் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி மிதமான பணவீக்கத்தை உருவாக்குவது தவிர்க்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் இந்திய பொருளாதாரத்தை தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணவீக்கம் 4 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள நிலையில், வளர்ச்சி விகிதம் 8 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதையும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்கா வட்டி விகிதம் குறைப்புத் தொடர்பாக பதிலளித்த அவர், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துதான் எதையும் கூற முடியும் என்று கூறியுள்ளார்.