Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அச்சப்படத் தேவையில்லை : சிதம்பரம்!

Advertiesment
அச்சப்படத் தேவையில்லை : சிதம்பரம்!
, செவ்வாய், 22 ஜனவரி 2008 (17:47 IST)
பொருளாதாரம் வலிமையாக உள்ளது. முதலீட்டாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்குப் பிறகு, பங்குச் சந்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் பங்கு விலைகள் சரிந்ததால், ஒரு மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பிறகு வர்த்தகம் தொடங்கிய போது, சென்செக்ஸ் 915.44 புள்ளிகள் அதிகரித்தது.

ஆனால் பலர் பீதி அடைந்து அதிக அளவு பங்குகளை விற்பதால், பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும் மீண்டும் குறைவதுமாக உள்ளது.

பங்குகளின் விலைகள் அதிதரித்து, மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது என்பதை புரோக்கர்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. விலை ஏற்றம் நத்தை வேகத்தில் உள்ளது. சர்வதேச சந்தைகளில் பங்குகளின் விலைகள் குறைந்துள்ளதால், இங்கும் அதன் பிரதிபலிப்பு இருக்கும். பங்குகளின் விலைகள் எதிர்பார்த்த அளவு உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் சிதம்பரம், மற்ற நாட்டு பொருளாதாரத்தைவிட நமது நாட்டு பொருளாதார அமைப்பு வேறுபட்டது. அந்நிய நாடுகளில் உள்ள நெருக்கடி போல், இங்கு எவ்வித பொருளாதார நெருக்கடியம் இல்லை. பங்குச் சந்தையின் மன ஓட்டம் நன்றாகவே இருக்கின்றது. நமது பொருளாதரத்தின் அடிப்படை கட்டமைப்பு பலமாக இருக்கின்றது. இந்திய நிறுவனங்களும் வலிமையாக இருக்கின்றன. இநத ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil