Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்போசிஸ் எதிரான வழக்கு தள்ளுபடி!

இன்போசிஸ் எதிரான வழக்கு தள்ளுபடி!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (18:23 IST)
இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களிடம் இருந்து வரி பிடித்தம் செய்யவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு:

இன்போசியஸ் நிறுவனம் அதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பங்குகளை பிரித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பங்குகளை ஒதுக்க முடிவு செய்தது. இதற்காக டெக்னாலாஜிஸ் எம்ப்ளாயிஸ் வெல்பேர் டிரஸ்ட் என்ற அறக்கட்டைளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பொறுப்பில் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ஒரு ரூபாய் என்ற விலையில் 7 லட்சத்து 50 ஆயிரம் வாரண்டுகளை ஒதுக்கியது.
இந்த வாரண்டுகள் விதி முறைகளின்படி தகுதியுள்ள ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும். இந்த 1 வாரண்டுக்கு பத்து ரூபாய் முகமதிப்புள்ள ஒரு பங்கு ரூ.100 என்ற விலையில் ஒதுக்கப்படும். இந்த வாரண்டுகளை பெற்றவர்கள் ஒரு வருடத்திற்குள் மீதம் ரூ.99 செலுத்தி பங்குகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் படி 1997-98,1998-99,1999-2000 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் பங்குகள் ஒதுக்கப்பட்டன.

இதன் படி பங்குகளை வாங்க ஊழியர்கள் ரூ.6 கோடியே 64 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.171 கோடி. எனவே மீதம் உள்ள 165 கோடியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியமாகவே கருத வேண்டும். இதற்கும் வரி பிடித்தம் செய்து வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை இன்போசியஸ் மீது வருமான வரி தீர்ப்பதாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பங்குகள் ஒதுக்கப்பட்ட விலைக்கும், அதன் சந்தை மதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை வருமான வரிச் சட்டம் 17 (2) III படி மறைமுக ஊதியமாக கருத முடியாது என்று கூறி வருமான வரித்துறையின் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை கர்நாடக மாநில உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதன் மேல் முறையீட்டை கர்நாடக உயர்நீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.
வருமான வரித்துறை இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இதனை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதி பி.எஸ்.ரெட்டி ஆகியோரை கொண்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன் நீதிபதிகள் வருமான வரித்துறையின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தனர். அவர்கள் அளித்துள்ள தீர்ப்பில், வருமான வரிச்சட்டம் 192 வது பிரிவின் கீழ் மறைமுக ஊதியம் என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனவே இன்போசியஸ் நிறுவனம் வரி பிடித்தம் செய்து கட்டவில்லை என்று வழக்கு தொடர்ந்திருப்பது தவறு என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil