பாரத ஸ்டேட் வங்கி நாளை முதல் வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
இதன் படி 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 7 விழுக்காடு வட்டி வழங்கப்படும். 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 7.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்
1 வருடத்திற்கும் அதிகமாக ஆனால் இரண்டு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 8.75 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முன்பு 46 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை 5.25 விழுக்காடு வட்டி வழங்கி வந்தது.
இதை தற்போது மூன்று கால கட்டமாக பிரித்துள்ளது. இதன் படி 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5.25 விழுக்காடு வட்டி வழங்கப்படும். 19 முதல் 180 நாட்கள் வரை 7 விழுக்காடும், 181 முதல் 364 நாட்கள் வரை 7.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.