பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பார்ட்டிசிபேட்டரி நோட் முறையில் பங்குகளை வாங்குவதற்கு தடை விதிக்க மாட்டோம். இந்த முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு உச்சவரம்பு விதிக்கதான் திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு உறுதி அளித்தார்.
சிதம்பரத்தின் அறிவிப்பிற்குப் பிறகு பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.
இன்று காலையில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவு பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண் 1,743 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 525 புள்ளிகளும் சரிந்தது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற முறை உட்பட ப்யூச்சர், டெரிவேட்டிவ்ஸ் முறையில் முதலீடு செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர இருப்பதாக அறிவித்தது.
இதன் காரணமாக இன்று பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.