Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தையில் ஊக வணிகம் : சிதம்பரம்!

பங்குச் சந்தையில் ஊக வணிகம் : சிதம்பரம்!

Webdunia

, சனி, 13 அக்டோபர் 2007 (11:13 IST)
பங்குச் சந்தையின் குறியீட்டு எண் உயர்வத‌ற்கு காரணம் ஊகவணிகம்தான் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை நிர்வாகிகளின் ஐந்தாவது மாநாட்டில் நிதி அமைச்சர் ப. சிதம்பரமகல‌ந்து கொ‌ண்டு பே‌சியதாவது:
பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பதும், பிறகு குறைவதும் எனக்கு சில நேரங்களில் கவலையை உண்டாக்குகிறது. ஆனால் இவை சில காலத்திற்கு பின் சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்வதற்கு காரணம், இதில் பல வழிகளில் இருந்தும் முதலீடு செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையை ஊகவணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பங்குச் சந்தை உயர்வதற்கு காரணம், அந்நிய நாடுகளில் இருந்து அதிகளவு முதலீடு வருவதே என்று நான் கருதுகின்றேன். பங்குச் சந்தை அரசியல் காரணங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் நான் ஏன் அதிருப்தி அடைய வேண்டும் என்று சிதம்பரம் கேட்டார்.

மேலும் அவர் கூறுகையில் பங்குச் சந்தை குறியீடு ஒவ்வொரு நாளும் அதிகரிப்பது, பிறகு குறைவது எனக்கு கவலையை உண்டாக்குகி்ன்றது. ஒவ்வொரு நாளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு விடாது.

அந்நிய முதலீடு நாட்டி‌ல் இருந்து வெளியேறி விடும் என்று அச்சப்படத் தேவையில்லை. பொருளாதார சீ‌ர்திருத்தம் நடைமுறைபடுத்திய பதினாறு ஆண்டுகளில், அந்நிய முதலீடு நாட்டில் இருந்து வெளியேறவில்லை.
அந்நியச் செலாவணி அதிகளவு வருவதால் ரூபாயின் மதிப்பு உயர்கிறது. இந்த வருடம் ரூபாயின் மதிப்பு 12.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ( டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ) ரூபாயின் மதிப்பு உயர்வது நமக்கு பாதுகாப்பாது அல்ல.

நமது நாட்டின் பொருளாதாரம் நன்கு வலிமையாக இருக்கின்றது. இதனால் அந்நிய செலாவணி எந்த அளவிற்கு வேகமாக வருகின்றதோ, அதே போல் வெளியேறிவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை.

நான் சமீபத்தில் அந்நிய நாடுகளில் மேற்கொண்ட பயணத்தில் இருந்து, அந்நிய முதலீடு அதிகளவில
இருக்கும் என்பதை உணர்ந்ததாக சிதம்பரம் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், பரஸ்பர நிதி ( மியூச்சுவல் பண்ட் ) வாயிலாக முதலீடு செய்வது நல்லது என்று கூறியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil