Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கம் 4.05 விழுக்காடாக குறைந்தது!

பணவீக்கம் 4.05 விழுக்காடாக குறைந்தது!

Webdunia

, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (21:16 IST)
குறைந்த விலையிலான அடிப்படைப் பொருட்களின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.05 விழுக்காடாக குறைந்துள்ளது!

அதற்கு முந்தைய வாரத்தில் 4.45 விழுக்காடாக இருந்த பணவீக்கம், பழங்கள், காய்கறிகள், பண்ணைக் கோழி ஆகியவற்றின் விலைகள் 5 விழுக்காடு குறைந்ததாலும், கம்பின் விலை 3 விழுக்காடும், கடலை, கடல் மீன் விலைகள் ஒரு விழுக்காடு குறைந்ததாலும் இந்த அளவிற்கு குறைந்துள்ளது.

ஆயினும், தேநீர் 7 விழுக்காடும், அரிசி, பால ஆகியன ஒரு விழுக்காடும் அதிகரித்துள்ளன.

கால்நடைத் தீவனங்களின் விலை 6 விழுக்காடு குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைவு மட்டுமின்றி, மைய வங்கி எடுத்த பணப்புழக்க குறைப்பு நடவடிக்கையும் பணவீக்கம் குறைவதற்கு காரணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil