இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் முடிவடைந்தது.
காலையில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 43.16 புள்ளிகள் உயர்ந்து 18,121.66 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 16.30 புள்ளிகள் அதிகரித்து 5,499.60 புள்ளிகளாக இருந்தது.
பின்னர் தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 154.93 புள்ளிகள் சரிந்து 17,923.57 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
இதபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 54.00 புள்ளிகள் குறைந்து 5,429.30 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவுடன் முடிவடைந்தது.