பங்குச்சந்தையில் இன்று சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. மும்பை பங்குவர்த்தகக் குறியீட்டெண் சென்செக்ஸ் 82.25 புள்ளிகள் சரிவாக 15,646 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 20.55 புள்ளிகள் சரிந்து 4685 புள்ளிகளாக இருந்தது.
துவக்கத்தில் ஜெய்பிரகாஷ் அஸோ., கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி. டி.சி.எஸ், ஐ.டி.சி. நிறுவனப்பங்குகள் லாபம் கண்டன.
ஜிண்டால் ஸ்டீல், டாடா பவர் கார்ப்பரேஷன், ஆர்.ஐ.எல்., மாருதி சுசுகி, எல்&டி நிறுவனப்பங்குகள் சற்றே சரிவு கண்டன.