மும்பை பங்குச் சந்தையில் இன்று உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் கடைசியில் 298.57 புள்ளிகள் சரிந்து 16,866.97 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 93.80 புள்ளிகள் சரிவடைந்து 5059.45 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோமோட்டோகார்ப், ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஜெய்ப்ரகாஷ் அசோ, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் டிஎல்எஃப், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டாடா பவர், சன் பார்மா, டிசிஎஸ், என்டிபிசி, சிப்லா, கோல் இந்தியா, எல் அண்ட் டி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.