Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு
, திங்கள், 11 ஜூலை 2011 (16:45 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 137 புள்ளிகள் சரிந்து 18,721.39 புள்ளிகளாக நிறைவடைந்தது.

தேசியப் பங்குச் சந்தை நிப்டி குறியீடு 44.55 புள்ளிகள் குறைந்து 5,616.10 புள்ளிகளாக நிறைவுற்றது.

இன்ஃபோஸிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனப்பங்குகள் 1.98% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.2,919 ஆகக் குறைந்தது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தி நிறுவனமான ஹின்டால்கோவின் பங்குகள் சுமார் 4% சரிவு கண்டது. இந்திய ஸ்டேட் வங்கியின் பங்குகள் விலையும் சற்றே சரிவு கண்டது.

Share this Story:

Follow Webdunia tamil